
உலகின் முதல் மெய்நிகர் தமிழ்ப் பள்ளி

தமிழ் மொழியால் இணைந்திருப்போம்

உலகெங்கும் வாழ்ந்தாலும் தமிழால் இணைத்திருக்கும் எங்கள் மாணவர்கள்

உயிரினும் மேலான எம் தாய்மொழி

பள்ளியின் காட்சி அரங்கம்

ஐக்கிய இராச்சியம்

ஐக்கிய இராச்சியம்

ஐக்கிய இராச்சியம்

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா
உலகளாவிய தமிழ்ப் பள்ளிக்கு வரவேற்கிறோம்
உலகளாவிய தமிழ் பள்ளியில், மொழி என்பது கலாச்சாரத்திற்கான வாசல் என்று நாங்கள் நம்புகிறோம். எமது நோக்கம் தமிழ் மொழியில் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதோடு, நமது கலாச்சரம் மற்றும் பண்பாட்டை போற்றிப் பாதுகாத்து அதை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதாகும்.
- தரப்படுத்தப்பட்ட உலகளாவிய பாடத்திட்டம்
- அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள்
- எல்லைகளில்லா கற்றல் அனுபவம்
தமிழ் மொழி
தாய்மொழியின் இனிமையும் ஆழமும் அனைத்துநிலைகளுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் மூலம் கற்றிடலாம். அடிப்படை வாசிப்பு, எழுத்து திறன்களிலிருந்து மேம்பட்ட புரிதல் வரை, மாணவர்கள் வலுவான மொழித்திறனை வளர்த்துக் கொள்ளவும் தமிழின் மீது ஆழ்ந்த பற்றை உருவாக்கவும் வழிகாட்டுகிறோம்.
கலை மற்றும் பண்பாடு
தமிழ் பாரம்பரியத்தின் செழுமையை அதன் பண்பாடு, இலக்கியம் மற்றும் நிகழ்கலைகள் வழியாக அனுபவிக்கலாம். இசை, கதைப்பாடல் மற்றும் பல்வேறு பண்பாட்டு செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் தங்கள் வேர்களுடன் இணைவதை ஊக்குவிக்கிறோம்.
தமிழ்ச் சமூகம்
தமிழ் கற்கும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இணையும் உற்சாகமான சமூகத்தின் ஒரு பகுதியாகுங்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் வளரவும், தங்கள் திறமைகளை பகிரவும், தங்கள் பண்பாட்டு அடையாளத்தை கொண்டாடவும் ஆதரவான சூழலை உருவாக்குகிறோம்.
கற்றல் அனுபவம்
எமது கற்றல் பயணத்தைச் சிறப்பாக்கும் தருணங்கள்.

Teaching materials and resources

Students work display

Classroom student activities

Students writing session
எங்கள் செயல்பாடுகள்
தமிழ்மொழி மட்டுமின்றி மாணவர்களின் பன்முகத் திறன்களை வளர்க்கிறோம்.
ஓவியம், இசை & நடன வகுப்புகள்
தகுதியுள்ள ஆசிரியர்களிடமிருந்து, பாரம்பரிய இசை, பாரதநாட்டியம் மற்றும் சதுரங்க வகுப்புகளை வழங்குகிறோம்.
மேலும் அறிய →நேரடி மேடை நிகழ்ச்சிகள்
மேடை நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்களின் பன்முகத்திறன்களை எடுத்துக்காட்டும் வாய்ப்பை வழங்குகிறோம்.
மேலும் அறிய →தமிழ் வீரக்கலை வகுப்புகள்
தமிழரின் வீரக்கலைகளான சிலம்பம், களரி அடிமுறை, வாள் சண்டை பயிற்சிகளை தகுந்த பாடத்திட்டத்தோடு வழங்குகிறோம்
மேலும் அறிய →இன்றே இணையுங்கள்
நடப்பு கல்வியாண்டிற்கான சேர்க்கை மாணவர்களின் வயது மற்றும் நேரமண்டலத்தின் அடிப்படையில் தேவைக்கேற்ற முறையில் வழங்குகிறோம். தங்களின் கற்றல் தேவைகளுக்கு எங்களை அணுகவும்.